Saturday, December 19, 2015



ஒரு மாத இடைவெளியில்
பிறந்த நாம்
உறவுக்குள் பிறந்ததால்
நட்புக்குள் நுழைந்தோம்..
சந்திப்பில் இடைவெளிகள் இருந்த போதிலும்,
உள்ளத்தில் இடைவெளி இருந்ததில்லை..
உள்ளத்தில் ஒன்றும் வையாமல்
எண்ணத்தையெல்லாம்
கொட்டித் தீர்ப்பேன் உன்னிடத்தில்....
திருமணமானால் தான்
திசை மாறிப் போவோம் என்றிருந்தேன்..
திருப்பி எடுக்க முடியாமல்
என் வாழ்வை
திசை திருப்பி விட்டு போவாயென 
கனவிலும் நினைக்கவில்லை..
யோசிக்க மறந்து விட்டாயா...?
நாம் நண்பர்கள் என்பதை...
அதையும் மீறி எம்மாத்திரம்
இடையில் வந்த புது உறவுகள்
உனக்கு பெரிசாய் போனது...?

இன்னும் என் தோழியின் பழைய
நட்பிற்காய்
காத்திருக்கிறேன்..
புரியாமல் போய் விடுமா உனக்கு
யார் செய்தது துரோகம் என....?


"இதயம் எப்போதும் இடைவெளி

விட்டுதான் துடிக்குதடி - இடையில்

என் காதலியே உன் நினைவு

நிறைந்து இருப்பதினால்"

எத்தனை
வருடங்களுக்குப் பிறகு
பார்த்தாலும் ,

எத்தனை
குழந்தைகள்
பெற்றபிறகு
பார்த்தாலும் ;

அங்கே
அழகாகவே தெரிகிறாள்
காதலி ...

இங்கேதான்
அழுதுகொண்டேயிருக்கிறது
"எங்கிருந்தாலும் வாழ்க "
என்ற காதல் ...!


பெண்ணே!!!
பாட்டிலே வரிகளாய் நீயே!
வரிகளிலிலே வார்த்தைகளாய் நீயே!
வார்த்தையிலே எழுத்துகளாய் நீயே!
எழுத்திலே உயிர் மெய் நீயே!
மெய்யிலே கண்ணாய் நீயே!
கண்ணிலே கருவிழியாய் நீயே!
கருவிழியின் பார்வையாய் நீயே!
பார்வையின் திறனாய் நீயே! நீயே !

ஏழையின் பசியாய் நீயே!
பசியிலே உணவாய் நீயே!
உணவின் சுவையாய் நீயே!
சுவையிலே தமிழாய் நீயே!
தமிழின் பழமையாய் நீயே!
பழமையின் அருமையாய் நீயே! நீயே!

கேட்கும் இசையாய் நீயே!
இசையின் மொழியாய் நீயே!
மொழியின் பயனாய் நீயே!
பயனின் விளைவாய் நீயே!
விளைவில் நன்மையாய் நீயே! நீயே!

பால்வளியிலே புவியாய் நீயே!
புவியிலே மண்ணாய் நீயே!
மண்ணிலே மரமாய் நீயே!
மரத்திலே இலையாய் நீயே!
இலையின் நிழலாய் நீயே!
நிழலின் இருளாய் நீயே!
இருளின் நிறமாய் நீயே! நீயே!

நிறத்திலே வெண்மையாய் நீயே!
வெண்மையிலே பாலாய் நீயே!
பாலிலே நீராய் நீயே!
நீரிலே கடலாய் நீயே!
கடலிலே உவர்ப்பாய் நீயே! நீயே!

கொடுப்பதிலே பாரியாய் நீயே!
கொட்டுவதிலே மாரியாய் நீயே!
ஆறிலே காவிரியாய் நீயே!
காவிரியின் கல்லணையாய் நீயே
கல்லணையின் வலிமையாய் நீயே!

வலிமையிலே மூவேந்தராய் நீயே!
மூவேந்தரின் முடியாய்(கிரீடம்) நீயே!
முடியின்(மயிர்) கருமையாய் நீயே!
கருமையின் இருளாய் நீயே!
இருளின் பகையாய் நீயே! நீயே!

மனதிலே கோவிலாய் நீயே!
கோவிலிலே கொடிமரமாய் நீயே!
கொடிமரத்திலே கொடியாய் நீயே!
கொடியிலே துணியாய் நீயே!
துணியிலே நூலாய் நீயே!
நூலிற்கு பருத்தியாய் நீயே! நீயே!

ஊரிலே வீதியாய் நீயே!
வீதியிலே பாதையாய் நீயே!
பாதையிலே கல்லாய் நீயே!
கல்லிலே மண்ணாய் நீயே!
மண்ணிலே துகளாய் நீயே!
துகளிலே மூலக்கூறாய் நீயே! நீயே!

விழித்தால் அறையெல்லாம் நீயே!
அறையின் சுவராய் நீயே!
சுவரில் ஓவியமாய் நீயே!
ஓவியத்தில் அற்புதமாய் நீயே!
அற்புதத்தில் தாஜ் மகாலாய் நீயே! நீயே!

கோவிலிலே நந்தவனமாய் நீயே!
நந்தவனத்தில் கோலமயிலாய் நீயே!
கோலமயிலிலே ஆணாய் நீயே!
ஆணின் வீரமாய் நீயே!
வீரத்திற்கு தமிழ் மண்ணாய் நீயே! நீயே!
தமிழ் மண்ணின் உயிராய் நீயே
உயிரிலே உணர்வாய் நானே! நானே!

உன்னை 
நினைத்து நினைத்து
ஒருநாள் 
துடிப்பதை மறந்து
விட போகிறது
என் இதயம்..!

மனசாட்சி இருந்தால்
ஒருமுறை, என்னோடு
இருந்த நாட்களை
நினைத்து பார் உன்
கண்களில் இருந்து
ஒருதுளி விழுந்தாலும்
போதும் என் காதல்
புனிதமாகும்..!

இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!
என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!


இதழ்கள் சொல்லாமல் 
தவிக்கும் என் காதலை...
பார்வையால்
 சொல்லலாம் என்றால் 
 பார்வை பார்வையற்று
 போகின்றன
 என் பார்வைகள்..
உன் பார்வையில்.........

இவள் கூந்தல் பின்னல்
 பார்த்து தான்! 
நான் அவள் பின்னால் சென்றேன்...
தலையில் சூடும் பூவாக - 
ஒருநாள் வாழ்ந்தால் போதுமென
 நினைத்து!
மலரை வைத்தேன் 
எனது காதலை...
மாலையில் வாடியது
 பூ - 
மட்டுமல்ல
நானும் தான்

நீ எவ்வளவு வலிகள் 
கொடுத்தாலும் 
தாங்கிக்கொண்டு உன்
 நினைவுகளுடன் 
உயிர் வாழ்வேன்!... 
நான் படும் வேதனைகள்
 உன் இதயத்திற்கு தெரியும்!... 
ஒரு நாள் புரிந்து கொள்வாய்
Design by Thanuskaran
>
எங்கள் முகபுத்தக பக்கத்தில் சேர மறக்க வேண்டாம்
×